3வது குழந்தைக்கு ₹30,000, 4வது குழந்தைக்கு ₹40,000: ஆந்திரா அறிவிப்பு

3வது குழந்தைக்கு ₹30,000, 4வது குழந்தைக்கு ₹40,000: ஆந்திரா அறிவிப்பு

2 mins read
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஆந்திர அரசு புதிய நிதியுதவித் திட்டத்தை அறிவித்துள்ளது.
56fddac6-4869-4143-b502-091cd7097a9a
சிறகாகுளம் மாவட்டம் நரசான்னபேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, மக்கள் தொகை சமநிலையைப் பேண 2.1 என்ற பிறப்பு விகிதத்தை பராமரிப்பது அவசியம் என்றார். - படம்: தி இந்து

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் சரிந்து வரும் பிறப்பு விகிதத்தை உயர்த்தும் நோக்கில், 3வது குழந்தைக்கு ரூ.30,000, 4வது குழந்தைக்கு ரூ.40,000 நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை (மே 16) அறிவித்துள்ளார். சிறகாகுளம் மாவட்டம் நரசான்னபேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மக்கள் தொகை சமநிலையைப் பேண 2.1 என்ற பிறப்பு விகிதத்தை பராமரிப்பது அவசியம் என்ற அவர், பிறப்பு விகிதக் குறைவும் முதியோர் அதிகரிப்பும் பொருளியல் வளர்ச்சியைப் பாதிக்கும் என்றும் எச்சரித்தார்.

ஒரு காலத்தில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை ஆதரித்த தான், தற்போது பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.

புதிய ‘ஸ்வர்ணாந்திரா’ திட்டத்தின்கீழ், 3வது, 4வது குழந்தைகளுக்கான நிதி தாயின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

மேலும், 3வது 4வது குழந்தைகளுக்கு 18 வயது வரை இலவசக் கல்வி வழங்கபடும். மேலும் 3வது குழந்தையின் பராமரிப்பிற்கு முதல் 5 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 ஊட்டச்சத்து உதவித்தொகை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

ஆந்திராவில் பிறப்பு விகிதம் 1.5 ஆகக் குறைந்துள்ளதால், வரும் 2047க்குள் அம்மாநிலத்தின் 23 விழுக்காடு மக்கள் முதியவர்களாக மாறிவிடுவர். இதனால், இளைஞர்களின் எண்ணிக்கை சரிவதைத் தடுக்க ‘மூன்று குழந்தைகள் சிறந்தது’ என்ற புதிய முழக்கம் கொண்டு வரப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு கூறினார்.

பள்ளி செல்லும் பிள்ளைகளின் தாய்மார்களுக்கான ‘தல்லிகி வந்தனம்’ திட்டத்தில் இனி குழந்தைகளின் எண்ணிக்கைக் கட்டுப்பாடு நீக்கப்படும்.

அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக நீட்டிக்கப்பட உள்ளது.

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற சட்ட விதியையும் ரத்து செய்ய ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்