‘ஆப்பிள் பே’ செயலி விரைவில் இந்தியாவில் அறிமுகம்

‘ஆப்பிள் பே’ செயலி விரைவில் இந்தியாவில் அறிமுகம்

1 mins read
317eaf62-589b-4333-a560-703f70ca2c39
ஆப்பிள் நிறுவனம் ‘ஆப்பிள் பே’ எனும் செயலியை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. - படம்: பிக்சாபே

புதுடெல்லி: தொழில்நுட்பப் பெருநிறுவனமான ‘ஆப்பிள்’, இந்தியாவில் கட்டணச் சேவை வழங்கக்கூடிய கைப்பேசிச் செயலியை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

‘ஆப்பிள் பே’ செயலி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவிருப்பதாக இந்திய ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவில் தற்போது, ‘கூகல் பே’, ‘பேடிஎம்’, ‘ஃபோன்பே’ போன்ற செயலிகளை அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். இந்தச் செயலிகள் மூலம் விரைவாகப் பணம் அனுப்ப முடிகிறது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் திட்டம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இதற்காக ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி, ஆக்சிஸ் வங்கிகளுடன் ஆப்பிள் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. மேலும், மாஸ்டர் கார்டு, விசா ஆகிய நிறுவனங்களுடனும் அது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

இந்த ஆண்டின் (2026) மத்தியில் ‘ஆப்பிள் பே’ செயலியை இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் ஆப்பிள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவின் திறன்பேசிச் சந்தையில் 10 விழுக்காட்டுப் பங்கு வகிக்கும் ஆப்பிள் நிறுவனம், இந்தச் செயலி வாயிலாக விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறது. ‘ஆப்பிள் பே’ செயலி அமெரிக்காவில் முதல் முறையாகக் கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்