புதுடெல்லியில் விசாரணைக்குச் சென்ற அமலாக்க அதிகாரிகள்மீது தாக்குதல்

1 mins read
21583ae0-ff05-4efc-863e-d96d549056c4
கைப்பேசி செயலி மோசடி குறித்து விசாரணை மேற்கொள்ள சென்ற அதிகாரிகளைத் தாக்கிய குடும்பத்தினர். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: விசாரணைக்குச் சென்ற அமலாக்க அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்ட நபரும் அவரது குடும்பத்தினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் அமலாக்க அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தாக்குதல் குறித்து புதுடெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்புடைய வழக்குகளை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. அதன்படி கைப்பேசி செயலி மோசடி குறித்த வழக்கை புதுடெல்லி அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அசோக் சர்மாவிடமும் அவரது சகோதரர் உட்பட அவரது குடும்பத்தினரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்த சென்றனர். அப்போது, அதிகாரிகள்மீது அவர்கள் அனைவரும் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சூழலில்,நிலைமை கட்டுக்குள் உள்ளதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்