கார்களில் தானியங்கி பிரேக்: 2030 முதல் கட்டாயம்

கார்களில் தானியங்கி பிரேக்: 2030 முதல் கட்டாயம்

படம்: இந்து தமிழ் திசை

23 Oct 2026 - 7:44 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியாவில் சாலை விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், அனைத்துக் கார்களிலும் தானியங்கி பிரேக் அமைப்பு 2030ஆம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் அதிக அளவில் ஏற்பட்டு வரும் சாலை விபத்துகளைக் குறைப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து தீவிரமாக எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாகக் கார்களில் மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகளின் (ஏடிஏஎஸ்) சில பாதுகாப்பு அம்சங்களைக் கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, 2030 அக்டோபர் முதல் அனைத்து புதிய கார் மாடல்களிலும் மேம்பட்ட அவசரகால ‘பிரேக்கிங் சிஸ்டம்’ (ஏஇபிஎஸ்) பொருத்துவது கட்டாயமாக்கப்படும்.

2030க்கு முந்தைய, தற்போது உற்பத்தியில் உள்ள பழைய கார் மாடல்களுக்கு 2032 அக்டோபர் முதல் ஏஇபிஎஸ் கட்டாயமாக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏடிஏஎஸ் பாதுகாப்பு அம்சங்களின் காலக்கெடு அடங்கிய வரைவு அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஏடிஏஎஸ் என்​பது 100க்​கும் மேற்​பட்ட மின்​னணு தொழில்​நுட்​பங்களின் ஒரு தொகுப்​பாகும். இது ஏற்​படக்​கூடிய அபாயங்களைக் கண்​டறிந்​து, ஓட்​டுநரை எச்​சரித்​து, சில சமயங்களில் மோதலைத் தடுப்​ப​தற்​காக பிரேக்​கு​கள் அல்​லது ஸ்டீயரிங்​கைத் தானாகவே கட்​டுப்​படுத்​து​வதன் மூலம் பாது​காப்பை அதி​கரிக்​கிறது. தற்​போது, சில கார்​களில் ஏடிஏஎஸ் வசதி உள்​ளது.

பாதுகாப்பு அம்சங்களில் லாரி, பேருந்துகள் போன்ற வர்த்தக வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, மறைவுப் பகுதி தகவல், ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தைக் கண்டறிந்து எச்சரிக்கும் அமைப்பு, பாதை விலகல் எச்சரிக்கை போன்ற அமைப்புகளும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளன.

ஏஇபிஎஸ் அமைப்பு, ஒரு வாகனம் அல்லது தடையுடன் ஏற்படவிருக்கும் மோதலைக் கண்டறிந்து, ஓட்டுநர் செயல்படத் தவறினால் தானாகவே பிரேக்குகளைப் பயன்படுத்தும்.

வரும் 2027 ஜனவரி முதல் புதிய லாரி, பேருந்து மாடல்களில் ஏஇபிஎஸ் அமைப்பு கட்டாயமாக இடம்பெறும் எனக் கூறப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்