தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோதுமை, மாவு ஏற்றுமதித் தடை தொடரும்: இந்திய அமைச்சர்

2 mins read
1ff527f1-61ac-40cd-b5c1-c42c2a1a5314
கோதுமை. - படம்: இணையம்

புதுடெல்லி: இந்தியாவில் தற்போது கோதுமை தானியம் மற்றும் அதன் மாவுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் தடை தொடரும் என்று அந்நாட்டின் உணவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் பிரல்காத் ஜோ‌ஷி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர் வலியுறுத்தியதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்து கோதுமை ஏற்றுமதித் தடை நடப்பில் உள்ளது. அத்தடையை விலக்குமாறு அத்துறையினர் விடுத்த வேண்டுகோளை திரு ஜோ‌ஷி நிராகரித்துவிட்டார்.

கோதுனை உற்பத்தியை அதிகரிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்திய மாவு அரவை நிறுவனங்களின் கூட்டமைப்பில் ஆற்றிய உரையில் அவர் அவ்வாறு சொன்னார்.

இந்தியா, 2022லிருந்து கோதுமை உற்பத்தியில் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யவில்லை. பயன்பாட்டுக்குத் தேவையான அளவு கோதுமையை உற்பத்தி செய்வது தொடர்பான இலக்குகளை அடைவதில் இந்தியா சிக்கல்களை எதிர்நோக்குகிறது.

இந்தியாவில் 2021-22 ஆண்டு காலத்தில் கோதுமை உற்பத்தி அளவு 43.32 மெட்ரிக் டன் அளவு பதிவானது. பிறகு மோசமான வானிலை காரணமாக கோதுமை உற்பத்தி கணிசமான அளவு குறைந்தது.

2022-23 காலத்தில் அவ்விகிதம் 18.78 மெட்ரிக் டன்னாகப் பதிவானது. அதற்குப் பிறகு விகிதம் அதிகரித்து வந்துள்ளது.

எனினும், 2021-22 காலத்தில் பதிவானதைக் காட்டிலும் கோதுமை உற்பத்தி அளவு இன்னும் குறைவாகவே உள்ளது. மேலும், மொத்த இந்தியாவுக்கும் முக்கிய உணவு உற்பத்தித் தளமாக விளங்கும் பஞ்சாப் மாநிலத்தில் இவ்வாண்டு கோதுமை உற்பத்தி பாதிப்படையும் என்ற அச்சம் நிலவுகிறது.

40 ஆண்டு காலத்தில் காணப்படாத மோசமான வெள்ளம் அந்த மாநிலத்தைப் பாதித்துள்ளது அதற்குக் காரணம். பஞ்சாப்பில் வழக்கத்தைவிட 50 விழுக்காடு அதிகமாக மழை பெய்துள்ளதாக இந்திய வானிலைப் பிரிவின் புள்ளிவரங்கள் காட்டுகின்றன.

2024-25 ஆண்டு காலத்தில் உற்பத்தியான மொத்த கோதுமை அளவில் பஞ்சாப்பில் உற்பத்தியான கோதுமையின் அளவு கிட்டத்தட்ட 40 விழுக்காடாகும்.

குறிப்புச் சொற்கள்