தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மழைநீர், சகதி, குப்பையால் மூழ்கிய வங்கிக் கிளை: கோடிக்கணக்கான நகைகள், பணம் குறித்து மக்கள் அச்சம்

2 mins read
d653cd76-2aad-4fe5-8f7f-7d3a1dd8aa4e
தண்ணீர், சகதி, சேறு, குப்பையால் மூழ்கிய இமாச்சலப் பிரதேசம் வங்கிக் கிளை. - படம்: இந்து தமிழ் திசை

சிம்லா: இ​மாச்சலப் பிரதேச மாநிலத்​தில் கடந்த இரண்டு வாரங்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் அவ்வப்போது ஏற்படும் நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கினால் அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்தச் சூழலில், மண்டி மாவட்​டம், துனாக் கிராமத்​தி​லுள்ள இமாச்சலப் பிரதேசம் கூட்​டுறவு வங்​கிக் கிளை​யானது மழைநீரில் மூழ்​கி​யுள்​ளது. சகதியும் குப்பைக் கூளங்களும் வங்​கிக் கிளை முழு​வதும் தேங்​கிக் கிடக்​கின்றன.

இதையடுத்து, இந்த வங்கியில் வைப்புத் தொகையாகப் போடப்பட்டிருந்த கோடிக்​கணக்கிலான ரொ​க்கப் பணமும் தங்க, வைர நகைகளும் என்ன நிலையில் இருக்கும் என்று மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த வங்கி அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டடத்​தின் முதல் மாடி வரை தண்​ணீர் தேங்கி நிற்​கிறது.

வெள்ளத்தின் காரண​மாக வங்​கிக் கிளை​யின் முகப்​பிலிருந்த மூன்று கதவுகளும் அடித்​துச் செல்​லப்​பட்டு விட்​டன. இதனால் வங்கி முழு​வதும் நீர் நிரம்​பி காணப்படுவதால், வங்​கி​யில் எந்த அளவுக்குச் சேதம் ஏற்​பட்டுள்ளது என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

வங்​கி​யில் கணக்கு வைத்​திருக்​கும் உள்​ளூர் வியா​பாரியான ஹரி மோகன் என்​பவர் கூறும்​போது, “இந்த வங்​கிக் கிளை​யில் 150க்கும் மேற்பட்ட வியா​பாரி​களும் துனாக் டவுன் பகு​தி​யில் வசிக்​கும் 8,000க்கும் மேற்​பட்ட பொது​மக்​களும் கணக்கு வைத்​துள்​ளனர்.

“நாங்கள் அனை​வருமே இந்த ஒரேயொரு வங்​கிக்​ கிளை​யை நம்பித்​தான் தினந்தோறும் எங்களது பணத்தை வங்கியில் போடுவதும் எடுப்பதுமாக இருந்து வருகிறோம்.

“வெள்​ள பாதிப்பு காரண​மாக வங்​கி​யில் இருந்த ரொக்​க​மும் நகைகளும் என்​ன​வா​யின என்​பது குறித்து பெரும் கவலை​யாக உள்ளது,” என்​றார்.

இமாச்​சலில் பெய்து வரும் கனமழைக்கு இது​வரை 78 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதிவரை இங்கு 23 முறை வெள்​ளப்​பெருக்​கும் 19 முறை மேகவெடிப்பு மழை​யும் 16 முறை நிலச்​சரி​வும்​ ஏற்​பட்​டுள்​ளன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

குறிப்புச் சொற்கள்