அந்நியச் செலாவணி சட்டத்தை மீறிய பிபிசி; ரூ.3.34 கோடி அபராதம்

1 mins read
87e7e9c2-919e-4c27-8049-2abea3b2b4d6
2023 பிப்ரவரியில் டெல்லி,மும்பை ஆகிய மாநிலத்தில் உள்ள ‘பிபிசி’ வளாகத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் லாபத்தை திசைதிருப்பி பணமோசடியில் அந்நிறுவனம் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. - படம்:இணையம்

புதுடெல்லி: இந்தியாவில் செயல்படும் ‘பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன்’ (பிபிசி) செய்தி நிறுவனத்தின் கிளை அலுவலகத்தின்மீது அந்நியச் செலாவணி விதிமீறல் தொடர்பில் ஈராண்டுக்குப் பிறகு ரூ.3.34 கோடி அபராதத்தை அமலாக்கத் துறை விதித்துள்ளது.

பிப்ரவரி 21ஆம் தேதி வெளியான அந்த உத்தரவில், அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின்கீழ் பிபிசி நிறுவனத்தின் மூன்று இயக்குநர்களுக்கு தலா ரூ.1.14 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை கூறியது.

மேலும், இயக்குநர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்துடன் 2021ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி முதல் ஒவ்வொரு நாளுக்கும் ரூ .5,000 அபராதம் அந்நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் இந்திய ஊடகத்திடம் தெரிவித்தார்.

2023 பிப்ரவரியில் டெல்லி,மும்பை ஆகிய மாநிலத்தில் உள்ள ‘பிபிசி’ வளாகத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் லாபத்தை திசைதிருப்பி பணமோசடியில் அந்நிறுவனம் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது.

குறிப்புச் சொற்கள்