பெங்களூருவில் ரூ. 23 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; 10 பேர் கைது

பெங்களூருவில் ரூ. 23 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; 10 பேர் கைது

1 mins read
உள்ளூர், அனைத்துலக விநியோகஸ்தர்களின் உதவியுடன், மாணவர்கள், இளைஞர்களைக் குறிவைத்து இந்தக் கட்டமைப்பு செயல்பட்டு வந்ததாக பெங்களூரு காவல்துறை தெரிவித்துள்ளது.
2479a4b2-d472-481b-b867-4875fcdae56f
கடந்த சில மாதங்களாகப் பெங்களூரு நகரம் முழுவதும் நடத்தப்பட்ட பெரியளவிலான சோதனை நடவடிக்கையில், ரூ. 23.63 கோடி மதிப்பிலான பல்வேறு வகையான போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. - படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

பெங்​களூரு:  பெங்களூரு மாநகர காவல்துறை அதிரடி நடவடிக்கையில் ரூ.23.61 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இரு பெண்கள் உட்பட 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது பல்வேறு மாநிலங்கள், நாடுகளுடன் தொடர்புடைய சங்கிலித்தொடர் போன்ற கட்டமைப்பு என்று பெங்​களூரு மாநகரக் காவல் ஆணை​யர் சீமந்த் குமார் சிங் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கூரியர் மூலம் வெளிநாட்​டில் இருந்​தும் வெளி மாநிலங்​களில் இருந்​தும் போதைப்பொருளை வரவழைத்​து, பெங்​களூரு​வில் கல்​லூரி மாணவர்​கள் மத்தியில் விற்​பனை செய்​தது முதற்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்ளதாக அவர் கூறினார்.

கடந்த சில மாதங்களாக நகரம் முழுவதும் பெங்களூரு மத்​திய குற்​றப்​பிரிவு காவல்துறையினர் போதைப்​பொருள் தடுப்​புப் பிரி​வினருடன் இணைந்து அதிரடி நடவடிக்கையில் ஈடு​பட்​டனர்.

அமலாக்க நடவடிக்கையில் மொத்​தம் 5.91 கிலோ ‘எம்​டிஎம்ஏ’, 21.82 கிலோ ‘ஹைட்ரோ’ கஞ்சா, 1.51 கிலோ ‘கோக்​கைன்’ உள்​ளிட்ட போதைப்பொருள்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

கைதுசெய்யப்பட்டவர்களில் மூவர் வெளிநாட்டினர். அவர்களில் இருவர் பெண்கள். ஐவர் வெளி​மாநிலங்​களை சேர்ந்​தவர்​கள். இருவர் உள்ளூர்வாசிகள். கைதானவர்களிடமிருந்து மூன்று கார்கள், இரண்டு இரு சக்கர வாக​னங்​கள், ஒன்பது கைப்பேசி​கள், ரூ.50,500, 28 கிராம் தங்க நகைகள் ஆகியவை பறி​முதல் செய்​யப்​பட்​டன.

அந்தக் கும்பல் நன்கு திட்டமிட்டு, பல அடுக்குகளாகப் பிரிந்து சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டு வந்ததாகக் காவல்துறை கூறியது. நகரின் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்