புதுடெல்லி: சிறந்த ஜனநாயகத் தலைவர் பட்டியலில், உலகளாவிய நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். திரு மோடி ஒரு சிறந்த ஜனநாயகத் தலைவர் என்பதை ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 75 விழுக்காட்டினர் ஏற்றுக்கொண்டு அவரைத் தேர்ந்தெடுத்தனர். ஏழு விழுக்காட்டினரால் முடிவெடுக்க முடியவில்லை. திரு மோடி சிறந்த ஜனநாயகத் தலைவர் அல்ல என்று 18 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
அமெரிக்காவை மையமாகக் கொண்டு வர்த்தக நிறுவனமான மார்னிங் கன்சல்ட் இத்தகவலை வெளியிட்டது.
பிரதமர் மோடியை அடுத்து தென்கொரிய அதிபர் லீ ஜே மியூங் இரண்டாவது இடத்தையும் அர்ஜென்டினாவின் ஜேவியர் மில்லேய் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு 44 விழுக்காடு ஆதரவு வாக்குகள் மட்டுமே கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

