தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெண்கள் பணிபுரிய ஏற்ற மாநிலம்: ஆந்திராவுக்கு முதலிடம்; 4ஆம் இடத்தில் தமிழகம்

1 mins read
5b054a29-b4ea-4789-97e1-7277e072fdc7
அனைத்துலக கல்வித் திறனை அடையாளம் காணும், ‘விபாக்ஸ்’ என்ற தனியார் அமைப்பு, அண்மையில் ‘இந்தியாவின் திறன்கள்-2025’ என்ற பெயரில் ஆய்வறிக்கையை வெளியிட்டது. - கோப்புப் படம்: ஊடகம்

புதுடெல்லி: பெண்கள் பணிபுரிய ஏற்ற மாநிலமாக ஆந்திரா திகழ்கிறது. இந்தியாவில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிப்பதுடன், பணிபுரிய ஏற்ற மாநிலங்கள் குறித்து அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து வெளியான பட்டியலில் ஆந்திரா முதலிடத்திலும் தமிழகம் நான்காம் இடத்திலும் உள்ளன.

அனைத்துலக கல்வித் திறனை அடையாளம் காணும், ‘விபாக்ஸ்’ என்ற தனியார் அமைப்பு, அண்மையில் ‘இந்தியாவின் திறன்கள்-2025’ என்ற பெயரில் ஆய்வறிக்கையை வெளியிட்டது.

பாலின சமத்துவம், தொழில் சார்ந்த வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட காரணிகள் பெண்களை ஈர்த்து வருவதால், கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் சீராக அதிகரித்து வந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019ஆம் ஆண்டு, பணிக்குச் செல்லும் பெண்களின் விகிதம் 45.6ஆக இருந்தது. தற்போது அது 47.53 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

பெண்கள் வேலைக்குச் செல்ல உகந்த இடங்களுக்கான பட்டியலில் ஆந்திரா முதல் இடத்தில் உள்ளது. இதில் பெண்களின் அடுத்தடுத்த தேர்வாக கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன.

நான்காவது இடத்தில் தமிழகமும் ஐந்தாவது இடத்தில் மகாராஷ்டிராவும் உள்ளன. கர்நாடகா எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட மாநிலங்களின் சமூக, பொருளியல் வளர்ச்சியின் அடிப்படையிலேயே அவை பெண்களைக் கவர்ந்துள்ளதாகவும் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

குறிப்புச் சொற்கள்