வாரணாசி: உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாராணாசியில் காசி தமிழ் சங்கமம் 3.0 (கேடிஎஸ் 3.0) நடைபெறுகிறது. இதில் இந்தியக் கல்வி அமைச்சு நடத்திய மொழிபெயர்ப்புப் பயிலரங்கில் மகாகவி பாரதியாரின் கொள்ளுப்பேத்தி முனைவர்.ஜெயந்தி முரளி கலந்து கொண்டார்.
பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 24ஆம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவின் ஒரு பகுதியாக பிப்ரவரி 21ஆம் தேதி இந்தியக் கல்வி அமைச்சால் மொழிபெயர்ப்புப் பயிலரங்கு நடத்தப்பட்டது.
வாராணாசிவாசியான அவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் சகோதரியின் கொள்ளுப்பேத்தி ஆவார். இம்மொழிபெயர்ப்புப் பட்டறையில், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் 24 இந்தி மொழியில் இயற்றப்பட்ட சிறுவர் இலக்கிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சஞ்சய் குமார், முனைவர்.ஜெயந்தி முரளி ஆகியோர் இந்நூல்களை மூன்றாம் காசி தமிழ் சங்கமத்தின் ஒரு பகுதியாக வெளியிட்டனர்.