நேரில் முன்னிலையாகும்படி மெஸ்ஸி, ஷாருக்கானுக்கு இந்திய ஆணையம் உத்தரவு

பாட்னா: கல்வி நிலையம் சார்ந்த வழக்கில் உலகின் முன்னணிக் காற்பந்து ஆட்டக்காரரான அர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸியும் இந்தித் திரையுலக நட்சத்திரம் ஷாருக்கானும் நேரில் முன்னிலையாக வேண்டுமென இந்தியாவின் பீகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அந்தக் கல்வி நிலையத்தின் விளம்பரத் தூதர்களாக மெஸ்ஸியும் ஷாருக்கும் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்தக் கல்வி நிலையம் தொடர்பில் முகம்மது ஷம்ஷத் அகமது என்பவர் வழக்கு தொடுத்துள்ளார்.

இதுபற்றி அகமதின் வழக்கறிஞர் எஸ்.கே. ஜா கூறுகையில், “அகமதின் இரு மகன்களும் அக்கல்வி நிலையத்தில் சேர்ந்தனர். அங்கு பயின்ற காலத்திற்கான கல்விக் கட்டணத்தை அவர்கள் செலுத்திவிட்டனர். மனநிறைவு தருவதாக இல்லாததால் இருவரும் அக்கல்வி நிலையத்திலிருந்து விலகிவிட்டனர். ஆயினும், வெவ்வேறு பிரிவுகளின்கீழ் அவர்களுக்குக் கடன் வழங்கியதாகவும் அதனைத் திருப்பிச் செலுத்துமாறும் அக்கல்வி நிலையம் அகமதைக் கேட்டுக்கொண்டது,” என்று விளக்கினார்.

அதனைத் தொடர்ந்து, 2023 அக்டோபர் 30ஆம் தேதி அகமது அக்கல்வி நிலையத்திற்கு எதிராக மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார்.

விசாரணையின்போது, நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், விளம்பரத் தூதர்களான மெஸ்ஸி, ஷாருக் உள்ளிட்ட எழுவருக்கு ஆணைய அமர்வு அறிக்கை அனுப்பியது. அவர்கள் 2024 ஜனவரி 12ஆம் தேதி நேரில் முன்னிலையாக வேண்டுமென அதில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஷாருக் மற்றும் மெஸ்ஸியின் வழக்கறிஞர்கள் முன்னிலையாகினர். ஆயினும், வழக்கின் உண்மையான ஆவணங்களை அவர்கள் தாக்கல் செய்யத் தவறினர்.

இதனையடுத்து, வழக்கு விசாரணையை ஏப்ரல் 12ஆம் தேதிக்குத் தள்ளிவைத்த ஆணைய அமர்வு, அன்றைய நாளில் மெஸ்ஸியும் ஷாருக்கும் முன்னிலையாகுமாறும் உத்தரவு பிறப்பித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!