பண பலத்தால் பாஜக வெற்றி: சாடும் உத்தவ் தாக்கரே

1 mins read
4ef3caa0-f4f7-4589-ae49-e7f9977cf3ad
உத்தவ் தாக்கரே. - படம்: நியூஸ்18

மும்பை: சிவசேனாவை எந்தக் காலத்திலும் பாஜகவால் அழிக்க முடியாது என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

பண பலத்தால் மும்பை மாநகராட்சியை பாஜக கைப்பற்றி உள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அண்மையில் நடந்த மகாராஷ்டிர மாநில உள்ளாட்சித் தேர்தலில் 30 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்த தாக்கரே குடும்பத்தார் தோல்வி அடைந்தனர்.

இந்நிலையில், சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உத்தவ் தாக்கரே, மராட்டிய மக்களின் உரிமைக்காகப் போராடுவதற்காகவே சிவசேனா கட்சி தொடங்கப்பட்டது என்றார்.

மகாராஷ்டிராவில் மராட்டி அல்லாத கலாசாரத்தைத் திணிக்கும் முயற்சி நடந்து வருவதாக அவர் சாடியுள்ளார்.

பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் இந்தி கட்டாயமாக்கும் முடிவை ஏற்க முடியாது என்றார் உத்தவ் தாக்கரே.

இது பாஜக சதியின் ஒரு பகுதி என்றும் சிவசேனா அதிகாரத்துக்கு ஆசைப்பட்டு தொடங்கப்பட்ட கட்சியல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்