சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் மொத்தம் உள்ள 245 இடங்களில் 9 இடங்கள் காலியாக உள்ளன.
மீதமுள்ள 236 இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது.
இந்நிலையில், பாஜக அணியில் அதிமுக இணைந்துள்ளதால் அந்தக் கட்சி வசமுள்ள 4 மாநிலங்களவை எம்பிக்களின் ஆதரவும் பாஜக அணிக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் பாஜகவின் பலம் 123ஆக அதிகரித்துள்ளது.
பாமகவைச் சேர்ந்த அன்பு மாரியின் பதவிக்காலம் வரும் ஜூலையில் முடிகிறது. அவர் மீண்டும் மேல்சபை உறுப்பினரானால் பாஜக பலம் 124ஆக அதிகரிக்கக்கூடும்.
இதற்கிடையே, தமிழகத்தில் தாமரை இரட்டை இலையோடு மலரும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
தமிழகத்தில் பாஜக கூட்டணி கணிசமான இடங்களைப் பெற்றால் மேலவையில் அதன் பலம் மேலும் அதிகரிக்கும்.
ஆந்திரா, ஜம்மு-காஷ்மீரில் காலியாக இருக்கும் மாநிலங்களவைக்கான தேர்தல் முடியும்போது பாஜக கூட்டணியின் பலம் 141ஆக உயரவும் வாய்ப்புள்ளது.

