பயிற்சியின்போது வெடித்த குண்டு; வீரர்கள் இருவர் உயிரிழப்பு

1 mins read
9ab0db08-c34e-4c7c-9d1a-41d74e69926d
கோப்புப்படம்: - ஊடகம்

நாசிக்: மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் பயிற்சியின்போது எதிர்பாராதவிதமாக வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இதில் 20 வயதான கோஹில் விஸ்வராஜ், 21, வயதான சயீஃபாத் ஆகிய இரு அக்னி வீரர்களும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

பயிற்சியின்போது இரு வீரர்கள் உயிரிழந்தது, சக வீரர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அக்னிபாத் திட்டத்தின்கீழ் பணியாற்றும் வீரர்கள், பணியின்போது உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்