புதுடெல்லி: இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு அண்மைய நாள்களாக வெடிகுண்டு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) அன்று டெல்லியில் பல்வேறு பள்ளிகளுக்கு மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இது, இந்த வாரத்தின் 3வது வெடிகுண்டு மிரட்டல் சம்பவமாகும்.
இதன்படி, டெல்லியில் கடந்த 11 நாள்களில் ஆறு முறை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகளில் பாதுகாப்பு ஊழியர்கள் தேடி மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால், சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கிடைக்கவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக காலை 5.02 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறை, உள்ளூர் காவல்துறை, மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டுகளைச் செயலிழக்கும் குழுவினர் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர்.
“அப்போது பள்ளிகள் முழுவதும் தேடி சந்தேகமான பொருள் எதுவும் கிடைக்கவில்லை என்றார் அந்த அதிகாரி,
இதற்கிடையே, துவாரகாவில் உள்ள ஐந்து பள்ளிகளுக்கும் மற்ற மாவட்டங்களில் உள்ள சில பள்ளிகளுக்கும் இதேபோன்று மின் அஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததாக தீயணைப்புத்துறை அதிகாரி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து மின் அஞ்சல் அனுப்பியவரைத் தேடி வருகிறது.