புதுடெல்லி: இந்திய அரசு சார்பு நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் தொலைதொடர்பு நிறுவனம் 2025ஆம் நிதியாண்டிற்கான மூன்றாம் காலாண்டில் ரூ.262 கோடி அளவுக்கு லாபம் ஈட்டி உள்ளது. 2007ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக இந்த காலாண்டில் லாபம் ஈட்டியுள்ளது பிஎஸ்என்எல்.
இணைப்பு விரிவாக்கம், நிர்வாக செலவுகளை குறைப்பது, அனைத்து வர்த்தக பிரிவுகளிலும் வளர்ச்சி ஆகியவை பிஎஸ்என்எல்-க்கு வெற்றியை பெற்று தந்துள்ளது.
4ஜி இணைப்பை விரிவுபடுத்துவது, உட்கட்டமைப்பை மேம்படுத்தியது, செலவினங்களை கட்டுப்படுத்தியது லாபத்தை ஈட்ட உதவியதாக தெரிவிக்கப்பட்டது.

