இந்தியாவுக்கு எரிவாயு வழங்க கனடா விருப்பம்

இந்தியாவுக்கு எரிவாயு வழங்க கனடா விருப்பம்

படம்: ரஷ்யா நியூஸ் போஸ்ட்/ஃபேஸ்புக்

12 Mar 2026 - 5:15 pm

2 mins read

டொரான்டோ: இந்​தி​யா​வின் அதி​கரித்து வரும் திரவ இயற்கை எரி​வாயுத் (எல்​என்ஜி) தேவைக்குக் கைகொடுக்கத் தயா​ராக இருப்​ப​தாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரி​வித்​துள்​ளார்.

“வரும் 2040ஆம் ஆண்​டுக்​குள் இந்​தி​யா​வின் எரிவாயுத் தேவை இரு மடங்​காக அதி​கரிக்​கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எரிசக்தி வல்​லரசு என்ற முறை​யில் இந்தியா​வின் தேவையை பூர்த்தி செய்ய கனடா தயா​ராக உள்​ளது,” என்று திரு மார்க் கார்னி எக்ஸ் சமூக வலைத்​தளத்​தில் பதிவிட்டுள்ளார்.

உலகின் மிகக் குறைந்த கரிம வெளி​யேற்​றம் கொண்டதும் பாதுகாப்பான முறை​யில் உற்​பத்தி செய்​யப்​படும் திரவ இயற்கை எரி​வா​யுவை (எல்​என்​ஜி) வழங்க கனடா தயா​ராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆசியா, ஐரோப்பா முழு​வதும் திரவ இயற்கை எரி​வா​யு பரவலாகப் பயன்படுத்​தப்​படு​கிறது.

போர்ச்சூழல், கத்​தா​ரின் எரி​வாயு விநி​யோகத்​தைப் பாதித்துள்​ள​தால், அதன் விலை உயர்ந்​திருப்​பதுடன், விநி​யோகத்​தி​லும் சிக்கல் ஏற்​பட்​டுள்ளது.

வரும் 2030ஆம் ஆண்டு இறு​திக்​குள் தனது புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தித் திறனை 500 ஜிகா​வாட்​டாக அதி​கரிக்​க​வும், நாட்​டின் முதன்மை எரிசக்தி தேவையில் எல்​என்​ஜி-​யின் பங்கை கிட்​டத்​தட்ட இரு​மடங்​காக உயர்த்​த​வும் இந்​தியா திட்டமிட்டுள்ளது. இதற்குக் கனடா உறு​துணை​யாக இருக்​கும்.

உற்​பத்​தி, தூய்​மை​யான தொழில்​நுட்​பம், அணுசக்தித் திட்டம் போன்றவற்றுக்​காக இந்​தியா முக்​கிய​மான தாதுப் பொருள்​களைத் தேடும் வேளை​யில், கனடா​ சிறந்த பங்காளித்துவ நாடாக அமை​யும். உலகில் உள்ள சுரங்க நிறு​வனங்​களில் 40 விழுக்காடு கனடா​வில் உள்​ளன என்று திரு மார்க் கார்னி தெரிவித்தார்.

ஆண்டுக்கு 100 மில்லியன் டன் வரையிலான எல்என்ஜி (LNG) ஏற்றுமதியுடன் கனடா எரிசக்தி வல்லரசாக உருவெடுக்கும் என்று கனடா கூறுகிறது.
ஆண்டுக்கு 100 மில்லியன் டன் வரையிலான எல்என்ஜி (LNG) ஏற்றுமதியுடன் கனடா எரிசக்தி வல்லரசாக உருவெடுக்கும் என்று கனடா கூறுகிறது. - படம்: குளோபல் டைம்ஸ்

கச்சா எண்​ணெய், எல்​பிஜி, எல்​என்ஜி அல்​லது யுரேனி​யம் என கனடா எதை வழங்​கி​னாலும் வாங்க இந்தியா தயா​ராக இருப்பதாக கடந்த மாதம் தகவல் வெளி​யானது.

குறிப்புச் சொற்கள்
இந்தியாஎரிசக்திஇயற்கை எரிவாயுகனடாஇறக்குமதிஏற்றுமதிஎண்ணெய்பற்றாக்குறைஈரான்போர்