தமிழ் நாட்டின் வேலூர் பகுதியில் 18 மாத குழந்தை ஒன்று பாம்பு கடித்ததில் மாண்டது.
சாலை வசதி ஒழுங்காக இல்லாத காரணத்தால் குழந்தையை சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கமுடியாமல் போனதாகக் கூறப்படுகிறது.
அவசர உதவி வாகனம் சாலையில் செல்ல முடியாததால் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தூரம் மாண்ட குழந்தையை பெற்றோர் வீட்டுக்கு கொண்டு சென்றனர்.
சம்பவம் அத்திமரத்துக் கொல்லை கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடந்தது.
வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த பெண் குழந்தையை பாம்பு கடித்தது, அதன் பிறகு குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மலைப் பகுதியில் சாலைகள் சரியில்லாததால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை மாண்டது.
உடல்கூறு பரிசோதனை முடிந்து குழந்தையின் சடலம் வீட்டுக்கு கொண்டு செல்ல அவசர உதவி வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், மலைக் கிராமத்துக்கு சாலை வசதி இல்லாமல் வாகனம் தொடர்ந்து செல்ல வழியின்றி, குழந்தையின் உடலை பாதி வழியிலேயே பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, மருத்துவ ஊழியர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.