தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அருணாச்சலப் பிரதேசம் அருகே சீனாவின் ஹெலிகாப்டர் தளம்

1 mins read
5e3d3929-c201-4663-8846-33e07189dd2c
ஹெலிகாப்டர் தளம் கோங்கிரிகாபு ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டு வருகிறது. - படம்: இந்திய ஊடகம்

கோல்கத்தா: இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் உள்ளது. அம்மாநிலத்தின் மீது சீனா தொடர்ந்து உரிமை கோரி வருகிறது.

இந்தியா- சீனா இடையே நீண்ட காலமாக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி தொடர்பாக பிரச்சினை உள்ளது, அதனால் சிலமுறை எல்லைகளில் பதற்றமும் ஏற்படுகிறது.

அருணாச்சலம் எல்லை அருகே தங்களது இருப்புகளை அதிகரித்துக் கொண்டே வருகிறது சீனா. இந்நிலையில், அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் சீனா ஹெலிகாப்டர் தளம் அமைத்து வருகிறது.

அதுதொடர்பான செயற்கைக்கோள் படம் அதை தெளிவாகக் காட்டுகிறது.

சீனாவின் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் செயல்களுக்கான திறனை அதிகரிக்க இந்தத் தளம் உருவாகுவதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த ஹெலிகாப்டர் தளம் கோங்கிரிகாபு ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் எந்த கட்டுமானமும் அங்கு இல்லை.

ஆனால் கடந்த 16ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் புதிய ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு வருவது தெளிவாகத் தெரிகிறது.

இந்த ஹெலிகாப்டர் தளத்தில் 600 மீட்டர் துாரத்திற்கு ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் புறப்படுவதற்கு இது சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஹெலிகாப்டர்களை நிறுத்துவதற்கு மூன்று இடம் அமைக்கப்பட்டுள்ளன. விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு வசதி மற்றும் அது தொடர்பான கட்டமைப்புகளும் அங்கு உள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்