சீன ராணுவம் ஊடுருவவில்லை: இந்தியா திட்டவட்டம்

சீன ராணுவம் ஊடுருவவில்லை: இந்தியா திட்டவட்டம்

2 mins read
d94d079f-16ce-4538-894e-1ae485523d00
சீனப் படைகள் இந்​திய எல்​லைக்​குள் நுழைந்​த​தாக தவறான தகவல்​களைப் பரப்​புவதைத் தவிர்க்க வேண்​டும் என்றார் அமைச்​சர் கிரண் ரிஜிஜு. - படம்: தி ஸ்டேட்ஸ்மேன்
Google News Preferred Icon

புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேச மாநில எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதாகப் பரவிய தகவலை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது முற்றிலும் பொய்யான தகவல் என இந்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்​சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

சீன ராணுவம் இந்தியக் கிராமத்​தைக் கைப்​பற்​றி​விட்​ட​தாக​ வெளி​யான தகவலை மறுத்துள்ள அமைச்சர் கிரண் ரிஜிஜு, அவ்வாறு எந்தவொரு சம்பவமும் நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேச எல்லையில், சீன ராணுவத்தினர் ஏறக்குறைய 60 கிலோ மீட்டர் தூரம் இந்தியப் பகுதிக்குள் ஊடுரு​விய​தாகத் தகவல் வெளியானது.

முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற காங்​கிரஸ் செயற்​குழுக் கூட்​டத்தில் பேசிய அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்​தி​யப் பகு​திக்​குள் சீனா ஊடுரு​வி​யுள்​ள​தாகக் கூறப்​படும் விவ​காரம் தொடர்​பாக, மோடி அரசு வெளிப்​படை​யாக விளக்​கம் அளித்​திருக்க வேண்​டும் என்றார்.

அருணாச்​சலப் பிரதேசத்​தின் குறிப்​பிட்ட சில நிலப்​பகுதிகளுக்கு சீனா உரிமை கோரு​கிறது. இதையடுத்து, எல்​லைப் பகு​தி​யில் இந்தியா பாது​காப்பு ஏற்​பாடு​களை வலுப்​படுத்​தி​யுள்​ளது.

இந்நிலையில், பங்ளாதேஷ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட, ஒன்றோடு ஒன்று தொடர்​பில்​லாத புகைப்​படங்​களைப் பயன்​படுத்​தி, சீன ராணுவம் அருணாச்​சலப் பிரதேசத்​துக்​குள் ஊடுரு​வி​யுள்​ள​தாகக் கூறு​வதும் சரியல்ல என்று திரு கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

இது​போன்ற தவறான தகவல்​கள் எல்லையில் பணி​யாற்​றும் ராணுவ வீரர்​கள், பாது​காப்​புப் படை​யினரின் மன உறுதியைக் குலைக்​கும் என்றும் நாட்​டில் குழப்​பத்​தை​ ஏற்படுத்​தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அருணாச்​சலப் பிரதேசத்​தின் எல்​லை​யோரக் கிராமங்களில் வசிக்​கும் மக்​கள் எழுப்​பி​யுள்ள கவலைகள் நியாயமானவை என்றார் அவர்.

அதே​நேரம், சீனப் படைகள் இந்​திய எல்​லைக்​குள் நுழைந்​த​தாகத் தவறான தகவல்​களைப் பரப்​புவதைத் தவிர்க்க வேண்​டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கார்கே குற்றச்சாட்டு

இந்நிலையில், வழக்​கம்​போல் ஊடுருவல் குறித்த தகவல்​கள் தவறானவை என்று இந்திய அரசு மறுத்துள்​ளது என்று திரு கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்திய ராணுவம் தனது கடமையைச் சிறப்​பாகச் செய்துவரும் நிலை​யில், சீனா​வுட​னான எல்லை தொடர்​பான முக்கியமான கேள்வி​களுக்கு மத்​திய அரசு தெளி​வான தகவல்களை வழங்​க​வில்​லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்