பல கோடி மதிப்புள்ள நல்லபாம்பு நஞ்சு பறிமுதல்

பல கோடி மதிப்புள்ள நல்லபாம்பு நஞ்சு பறிமுதல்

கோப்புப் படம்: மாலை மலர்

06 Nov 2026 - 8:14 pm

1 mins read

மும்பை: காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையின்போது, ரூ.5.25 கோடி மதிப்புள்ள நல்லபாம்பு நஞ்சு பறிமுதல் செய்யப்பட்டது.

மும்பையை அடுத்த தானே மாவட்டம் காஷிகாவ் பகுதியில் அனைத்துலகச் சந்தையில் பல கோடிகள் மதிப்புடைய வனவிலங்குப் பொருள்கள் கடத்தப்படுவதாகக் காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், டோடியா பகுதியில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அங்கு சந்தேகத்திற்குரிய இருவரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அவர்களிடம் நடத்திய சோதனையின்போது, ஒருவர் 250 மில்லிகிராம், மற்றொருவர் 260 மில்லிகிராம் எடையுள்ள திரவ வடிவிலான நல்லபாம்பு நஞ்சை இரு கண்ணாடிக் குடுவைகளுக்குள் வைத்திருந்தது தெரியவந்தது.

இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மேலும் மூவர் கைதாகினர்.

ஐவர் மீதும் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்