திருச்சி: கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த பத்திக் ஏர் விமானத்தில் கடத்திவரப்பட்ட இரு அரிய வகை உடும்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி விமான நிலைய அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளைச் சோதனையிட்டபோது அவ்விரு உயிரினங்களை அதிகாரிகள் கண்டறிந்ததாகக் கூறப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட அந்த உடும்புகள் எவ்வகையைச் சேர்ந்தவை, அவை எவ்வாறு கடத்தி வரப்பட்டன, இங்கு யாரிடம் ஒப்படைப்பதற்காக அவை கடத்தப்பட்டன போன்ற விவரங்களை வனத்துறை அதிகாரிகளின் உதவியுடன் சுங்கத்துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
உடும்பைக் கடத்தி வந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

