புதுடெல்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான, உடனடிப் போர் நிறுத்தத்திற்கு இணங்கியிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சனிக்கிழமை (மே 10) தமது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
“அமெரிக்கா இரவு முழுவதும் மேற்கொண்ட சமரசப் பேச்சைத் தொடர்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு இணங்கியிருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நியாயமாகச் சிந்தித்து நடைமுறை அறிவோடு முடிவெடுத்த இரு நாடுகளுக்கும் வாழ்த்துகள். இந்த விவகாரத்தில் நீங்கள் செலுத்திய கவனத்திற்கு நன்றி!” என்று திரு டிரம்ப் கூறினார்.

