புதுடெல்லி: வடக்கு ஒடிசாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் இதுவரையில் 170க்கும் மேற்பட்ட கிராமங்கள் மூழ்கியுள்ளதாக அரசுத் தரப்புச் செய்திகள் தெரிவித்தன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பலர் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவும் கால்நடைகளுக்குத் தீவனமும் வழங்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட வருவாய் பேரிடர் மேலாண்மை அமைச்சர் சுரேஷ் பூஜாரி, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணம், மீட்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகக் கூறினார்.
வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக அடுத்த சில நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.