இந்தியா, சீனா இடையே தொடர் கண்காணிப்பும் தேவை: ராணுவத் தளபதி

இந்தியா, சீனா இடையே தொடர் கண்காணிப்பும் தேவை: ராணுவத் தளபதி

1 mins read
d37fc903-9860-4465-b9d2-84482dcdf92b
எல்லையில் அமைதி, நிலைத்தன்மையைப் பேணிக் காப்பதில் ராணுவ ரீதியிலான தொடர்புகள் முக்கியப் பங்காற்றி வருவதாக உபேந்திர திவேதி கூறியுள்ளார்.  - கோப்புப் படம்: மின்ட்

புதுடெல்லி: இந்திய, சீன ராணுவங்களுக்கு இடையே ஆண்டுதோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கள அளவிலான ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாக இந்திய ராணுவத் தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையில் அமைதி நிலவி வந்தாலும் தொடர் கண்காணிப்பும் தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

படைகளை விலக்கிக் கொள்வதற்கான ஒப்பந்தம் களத்தில் அமைதி, நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது என்றும் இருநாடுகளும் தங்களுக்கு இடையேயான பரஸ்பர கவலைகளுக்கு உரிய மரியாதையை அளிப்பதாகவும் தளபதி உபேந்திர திவேதி தெரிவித்தார்.

எல்லையில் அமைதி, நிலைத்தன்மையைப் பேணிக் காப்பதில் ராணுவ ரீதியிலான தொடர்புகள் முக்கியப் பங்காற்றி வருவதாகக் குறிப்பிட்ட அவர், கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க இருதரப்புக்கும் இடையே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கள அளவிலான ஆலோசனைகள் நடந்து வருகிறது என்றார்.

இதனிடையே, ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் தாக்குதல் வட்டார அமைதிக்கு நேரடி அச்சுறுத்தல் என இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

பாகிஸ்தானின் அப்பட்டமான ஆக்கிரமிப்பு செயல், ஆப்கானிஸ்தானின் இறையாண்மை மீதான தாக்குதல் என்று இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் பாகிஸ்தானின் தொடர்ச்சியான, பொறுப்பற்ற செயல்பாட்டையும் உள்நாட்டுத் தோல்விகளை மறைக்க அந்நாடு மேற்கொள்ளும் பயனற்ற முயற்சிகளையும் வெளிப்படுத்துவதாக இந்திய வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்