36 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாயவுள்ள இந்திய ஏவுகணை

1 mins read
e2c5b904-14b7-4271-bb72-04d33f665fae
கோப்புப்படம்: டுவிட்டர்/இஸ்ரோ -

இந்தியாவின் ஸ்ரீ‌ஹரிகோட்டாவில் இருந்து 36 செயற்கைக் கோள்களுடன் இந்திய ஏவுகணை விண்ணில் பாயவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஏவுகணையின் பெயர் எல்விஎம்3- எம்3. அது நாளை (மார்ச் 25) காலை 9 மணிக்கு விண்ணில் பாய்கிறது.

பிரிட்டனின் நெட்வொர்க் ஆக்சஸ் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் 72 செயற்கைக் கோள்களை இஸ்ரோ அனுப்ப ஒப்பந்தம் செய்துள்ளது.

முதற்கட்டமாக கடந்த ஆண்டு 36 செயற்கைக் கோள்களை இஸ்ரோ அனுப்பியது. ஞாயிற்றுக்கிழமை மீத 36 செயற்கைக் கோள்கள் அனுப்பபடவுள்ளன.

செயற்கைக் கோள்கள் அனுப்பப்படுவதற்கான எண்ணிக்கையும் ஒன்வெப் என்ற இணையத் தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்