பச்சிளங்குழந்தையை விற்று மோட்டார்சைக்கிள் வாங்கியதாகப் பெற்றோர்மீது குற்றச்சாட்டு

பச்சிளங்குழந்தையை விற்று மோட்டார்சைக்கிள் வாங்கியதாகப் பெற்றோர்மீது குற்றச்சாட்டு

1 mins read
a001aba3-3544-4085-ad95-7395da5cdf36
குழந்தையை விற்றதாகக் கூறப்படுபவர்களிடமும் அதன் பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. - மாதிரிப்படம்: பிக்சாபே

புவனேஸ்வர்: இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பிறந்து ஒன்பது நாள்களே ஆன ஆண் குழந்தையை வேறொரு தம்பதியிடம் ரூ.60,000க்கு விற்ற தம்பதியர், அத்தொகையில் ஒரு பகுதியைக் கொண்டு மோட்டார்சைக்கிள் வாங்கியதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், அக்குற்றச்சாட்டை ஏற்க மறுத்த அத்தம்பதியர், கடும் வறுமையால் குழந்தையை வளர்க்க முடியாததாலேயே அதை வேறொரு தம்பதியிடம் வழங்கியதாகக் கூறினர்.

அத்தம்பதியரின் செயல் குறித்து தகவலறிந்த காவல்துறையும் குழந்தைநலக் குழுவும் சனிக்கிழமை (டிசம்பர் 28) அக்குழந்தையை மீட்டினர்.

அக்குழந்தை பாதுகாப்பாக இருப்பதாக குழந்தைநலக் குழு உறுப்பினர் மன்மோகன் பிரதான் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து குழந்தையை விற்றதாகக் கூறப்படுபவர்களிடமும் அதைப் பெற்றவர்களிடமும் அக்குழு விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்