தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சைஃப் அலிகானைத் தாக்கியவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

1 mins read
563a3331-8af5-48ce-906f-a073f2795d17
(இடமிருந்து) கைதான ஷெஹ்ஸாத், சைஃப் அலிகான். - படங்கள்: ஊடகம்

மும்பை: இந்தி நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய பங்ளாதேஷ் ஆடவர் 30 வயது முகம்மது ‌ஷரிஃபுல் இஸ்லாம் ‌ஷெஹ்ஸாத்தை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, ‌ஷெஹ்ஸாத்தின் வழக்கறிஞர் தினேஷ் பிரஜாபதி காவல்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், நீதிமன்றம் அதை ஏற்கவில்லை.

இதற்கிடையே, சைஃப் அலிகானை கத்தியால் குத்தியதை முகம்மது இஸ்லாம் ஒப்புக்கொண்டுள்ளார் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 16ஆம் தேதி சைஃப் அலிகானை அவரது வீட்டில் வைத்து ஷெஹ்ஸாத் கத்தியால் குத்தினார்.

குறிப்புச் சொற்கள்