தமிழக தேர்தலால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது; விரைவான தரிசனம்

குறைந்த கூட்டத்தால் பக்தர்கள் மகிழ்ச்சி: விரைவான தரிசன வசதி

தமிழக தேர்தலால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது; விரைவான தரிசனம்

1 mins read
db8f3961-c3bf-49dc-bccf-b4e4486e1f11
சட்டமன்றத் தேர்தல் காரணமாகத் தமிழகத்தில் இருந்து திருப்பதிக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளது. - கோப்புப்படம்: ஈடிவி பாரத்

திருப்பதி: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருவதால் தமிழகத்தில் இருந்து திருப்பதிக்குச் தரிசனத்திற்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளது.

இதன் காரணமாகப் பக்தர்களைத் தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் வைகுந்தம் வளாகங்கள் வெறிச்சோடி உள்ளன.

பக்தர்கள் கூட்டம் குறைந்துள்ளதால் 6 மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். விரைந்து தரிசனம் செய்வதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பதியில் வெள்ளிக்கிழமை 69,049 பேர் தரிசனம் செய்தனர். 23,842 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 3.57 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது

அதேவேளையில், ஆந்திராவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் தேவஸ்தான அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்