இந்திய நிதி நிறுவனங்களில் இணையத் தாக்குதல்: பின்னணியில் சீனத் தொடர்பு மென்பொருள்

இந்திய நிதி நிறுவனங்களில் இணையத் தாக்குதல்: பின்னணியில் சீனத் தொடர்பு மென்பொருள்

கோப்புப் படம்: ஐஸ்டாக்

06 Nov 2026 - 11:31 am

1 mins read

பெங்களூரு: இந்திய நிதி நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தொடர்ச்சியான ஏஐ (செயற்கை நுண்ணறிவு) அடிப்படையிலான இணையத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் உள்ள இணைய ஊடுருவல் குழுவின் பெயர் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் இணையப் பாதுகாப்பு முகமை அதனை வெளியிட்டுள்ளதுடன், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட மென்பொருள் கருவிகளையும் அடையாளம் கண்டுள்ளது.

அவற்றில் குறைந்தது இரண்டு கருவிகள் சீனாவுடன் தொடர்புடையவை. இதன்மூலம் வங்கிகளுக்கு எதிராக அவை பயன்படுத்தப்பட்ட நாடுகளின் வளர்ந்து வரும் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவால் (செர்ட்-இன்) ‘கிராஃப்டி ஃபால்கன்’ (Crafty Falcon) என்று அழைக்கப்படும் கணினி ஊடுருவல் குழு, வங்கி சாரா நிதி நிறுவனங்கள், நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மின்னிலக்கப் பரிவர்த்தனைத் தளங்களை ஊடுருவியதாக புதன்கிழமை (நவம்பர் 4) எச்சரிக்கைத் தகவல் வெளியானது.

எனினும், இந்த ஊடுருவல்களுக்குப் பின்னால் உள்ளவர்கள் யார் என்றோ அல்லது அந்த அமைப்பு எங்கிருந்து செயல்படுகிறது என்றோ ‘செர்ட்-இன்’ குறிப்பிடவில்லை.

அதிகாரிகள் எச்சரிக்கைகள் விடுத்த அதேவேளை இந்திய ரிசர்வ் வங்கி இணையப் பாதுகாப்புச் சோதனைகளைக் கடுமையாக்கிய போதிலும், அண்மைய வாரங்களில் இந்திய வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மீது அடுத்தடுத்து இணையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து அந்த எச்சரிக்கை அறிக்கை வெளியானது.

இணையத் தாக்குதல் நடத்துபவர்கள் பொதுவில் கிடைக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கருவிகளைப் பயன்படுத்துவதாகவும் இந்த அச்சுறுத்தல் தொடர்ந்து நீடிக்கும் ஒன்று என்றும் ‘செர்ட்-இன்’ அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்