நாட்டின் முன்னேற்றத்துக்கு இணையப் பாதுகாப்பு அவசியம்: அமித்ஷா

நாட்டின் முன்னேற்றத்துக்கு இணையப் பாதுகாப்பு அவசியம்: அமித்ஷா

1 mins read
192d9d3a-b4f7-46aa-98b9-d313cca5f70d
அமித்ஷா. - படம்: ஊடகம்

புதுடெல்லி: இணையப் பாதுகாப்பை உறுதி செய்யாமல் நாட்டின் முன்னேற்றத்தை நம்மால் உறுதி செய்ய இயலாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இணைய ரீதியிலான பாதுகாப்பு என்பதே இல்லை என இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் நிறுவன தின விழாவில் அவர் குறிப்பிட்டார்.

இணைய ரீதியில் நாடு எதிர்கொள்ளும் அச்சுறுத்தலைச் சமாளிக்க அனைத்துப் பங்குதாரர்களும் ஒன்றிணைவது அவசியம் என்றும் அமைச்சர் அமித்ஷா கூறினார்.

இணையப் பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்பின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, எதிர்வரும் 2047ஆம் ஆண்டுக்குள் அனைத்து அரசு அமைப்புகளும் இந்திய மொழிகளில் செயல்படுவதை அரசு உறுதி செய்யும் என அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமித்ஷா கூறியுள்ளார்.

மேலும், இந்தி மொழி அனைத்து மாநில மொழிகளுக்கும் நட்பு மொழியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிற மொழிகளுடன் போட்டி, பொறாமை, பரஸ்பர ஒத்துழைப்பு மூலம் இந்தி முன்னேற்றம் காண வேண்டும் என்று காலஞ்சென்ற மூத்த தலைவர்கள் கூறியதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“இந்தியா அதன் மொழியிலேயே ஆளப்படுவதும் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு இது தொடர்பாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதும் மிக முக்கியமானது,” என்றார் அமித்ஷா.

குறிப்புச் சொற்கள்