தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா: ஒரு கோடி கைப்பேசி இணைப்புகள் துண்டிப்பு

1 mins read
874a228d-e2e1-4150-8d46-6f3467dd006e
படம்: - பிக்சாபே

புதுடெல்லி: இணையக் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியத் தொலைத்தொடர்பு ஆணையமும் (TRAI) தொலைத்தொடர்புத் துறையும் இணைந்து அண்மையில் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டன.

தொல்லைதரும் அழைப்புகளையும் மோசடிப் பேர்வழிகளையும் கட்டுப்படுத்தும் இந்த நடவடிக்கையின்போது ஒரு கோடிக்கும் அதிகமான கைப்பேசி இணைப்புகளைத் துண்டித்ததாகவும் 2.27 லட்ச கைப்பேசிகளை முடக்கியதாகவும் ஆணையமும் தொலைத்தொடர்புத் துறையும் இணைந்து செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

மேலும், தேவையற்ற அழைப்புகளால் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்கும் முயற்சியில், முன்பதிவு முறையிலும் தானியக்க முறையிலும் தொலைபேசி அழைப்பு விடுப்பதற்காக இணைப்புகளைப் பயன்படுத்தும் நிறுவனங்களைத் தடுப்புப் பட்டியலில் சேர்க்கவும் அவர்களுக்கு வழங்கும் சேவையைத் துண்டிக்கவும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இந்தியத் தொலைத்தொடர்பு ஆணையம் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

“கடந்த பதினைந்து நாள்களில், இதுபோன்ற 3.5 லட்சத்திற்கும் அதிகமான எண்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் 50 நிறுவனங்கள் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. கூடுதலாக, சுமார் 3.5 லட்சம் பயன்படுத்தப்படாத மற்றும் சரிபார்க்கப்படாத குறுஞ்செய்திகளும் 2 லட்சம் உள்ளடக்க மாதிரிகளும் தடுக்கப்பட்டுள்ளன,” என அந்தக் கூட்டறிக்கையில் அவை குறிப்பிட்டன.

குறிப்புச் சொற்கள்