வடக்கில் கடுங்குளிர், தெற்கில் அடைமழை வதைக்கும் டிசம்பர்

1 mins read
9ea8f7f4-c13a-45d5-a9cf-b07344e4e929
வடக்கு காஷ்மீரில் டிசம்பர் 12ஆம் தேதி பனியில் விளையாடி மகிழ்ந்த சுற்றுப்பயணிகள். அடுத்த சில வாரங்களுக்கு அங்கு பனிக்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 40 நாள் கடும் பனிக்காலம் டிசம்பர் 21ல் தொடங்கும். - படம்: இபிஏ

புதுடெல்லி: இந்தியாவில் வடக்கு மாநிலங்களில் இந்த ஆண்டு குளிர் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் முதல் முறையாக இரவு நேர வெப்ப நிலை 4.5 டிகிரி செல்சியஸ் ஆக ஞாயிறு (டிசம்பர் 15) அதிகாலை பதிவாகியுள்ளது.

பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் கடும் குளிர் நிலவும். ஜம்மு காஷ்மீர், லடாக்கில் பனிப்பொழிவும் இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளில் இரவு நேர வெப்ப நிலை பூஜ்யம் டிகிரிக்கு கீழே சென்று விட்டது. சிகர் மாவட்டத்தின் பதேபூரில், இரவு நேர வெப்ப நிலை மைனஸ் 1.3 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குறைந்து விட்டது.

அதேநேரத்தில் தென் மாநிலங்கள் மழையுடன் போராடுகின்றன. வரும் வாரத்தில் புதுச்சேரி, கேரளா, கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உட்புற கர்நாடகத்தில் மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்