பாதுகாப்புத் தொழில்நுட்ப மேம்பாடு: ஐஐடி அறக்கட்டளை - இந்திய ராணுவம் ஒப்பந்தம்

பாதுகாப்புத் தொழில்நுட்ப மேம்பாடு: ஐஐடி அறக்கட்டளை - இந்திய ராணுவம் ஒப்பந்தம்

1 mins read
22194a17-47d6-4942-ab86-224e48d4a2be
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய ராணுவத்தின் மேஜர் ஜெனரல் லலித் கபூர் (வலமிருந்து மூன்றாமவர்), சென்னை ஐஐடி பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளையின் தலைமைச் செயலாக்க அதிகாரி எம்.ஜெ.ஷங்கர் ராமன் (இடமிருந்து மூன்றாமவர்) இருவரும் கையெழுத்திட்டனர். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: பாது​காப்புத் தொழில்​நுட்​பங்​களை மேம்​படுத்துவதன் தொடர்பில், சென்னை ஐஐடி அறக்​கட்​டளை​யுடன் இந்​திய ராணுவம் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​துகொண்டுள்​ளது.

பாது​காப்புத் தொழில்​நுட்​பங்​களை மேம்​படுத்​து​வதுடன் ராணுவத் தொழில்​நுட்​பங்​களில் வெளி​நாடு​களைச் சார்ந்​திருப்​பதைக் குறைப்​பதும் இலக்கு.

இதன் தொடர்பில், சென்னை ‘ஐஐடி பிர​வர்​தக் டெக்​னாலஜிஸ்’ அறக்​கட்​டளை​யும் இந்​திய ராணுவத்​தின் மின்னணுவியல், இயந்திரப் பொறியியல் பிரிவும் வியாழக்கிழமை (மார்ச் 26) புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​துகொண்டன.

பிர​வர்​தக் அறக்​கட்​டளை​யின் தலை​மைச் செயலாக்க அதிகாரி எம்​.ஜெ.ஷங்​கர் ராமன், இந்​திய ராணுவத்​தின் மேஜர் ஜெனரல் லலித் கபூர் இருவரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்​திட்டனர். இந்த ஒப்​பந்​தத்​தின் ஓர் அங்கமாக, ஆவடி​யில் ஆய்வு, கண்​டு​பிடிப்பு ஒருங்​கிணைப்பு மையம் அமைக்கப்பட்​டுள்​ளது.

ஒப்​பந்​தம் குறித்துக் கூறிய மேஜர் ஜெனரல் லலித் கபூர், “ஐஐடி பிர​வர்​தக் அறக்​கட்​டளை​யுடன் இணைந்து செயல்​படு​வதன் மூலம் ராணுவ நடவடிக்​கைகளை​யும் ஆயுதங்​களின் தரத்​தை​யும் மேம்​படுத்​து​வதைக் குறிக்​கோளாகக் கொண்​டுள்​ளோம். இதன்​மூலம், பாது​காப்புத் தொழில்​நுட்​பங்​களுக்கு வெளி​நாடு​களைச் சார்ந்திருக்கும் போக்கைக் கணிச​மாகக் குறைக்க முடி​யும்,” என்​றார்.

ஐஐடி பிர​வர்​தக் அறக்​கட்​டளை​யின் உத்திபூர்வ ஆலோ​சகரும் தென்​மண்டல ராணுவத்​தின் முன்​னாள் உயரதி​காரி​யு​மான லெப்​டினென்ட் ஜெனரல் கரன் சிங் பிரார், “இந்தக் கூட்டு முயற்சி மூலம் ஐஐடி கல்வி நிறு​வனம், ராணுவம் என இருதரப்புகளின் திறமை​களை ஒருசேரப் பயன்​படுத்​த முடியும்,’’ என்றார்.

குறிப்புச் சொற்கள்