கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் இருந்து நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அந்த ரயிலானது செவ்வாய்க்கிழமை காலை 6.20 மணியளவில் நியூ மைனகுரி ரயில் நிலையத்தின் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தால் அவ்வழியாகப் பயணம் மேற்கொள்ளும் ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டன, அதனால் ரயில் சேவை பெரிதாக பாதிக்கப்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
அலிபுர்துவார் கோட்ட ரயில்வே மேலாளர் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
போக்குவரத்தை சரிசெய்யும் முயற்சியில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

