இந்துார்: குடிமக்கள் அனைவருக்கும் மின்னிலக்க முகவரி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது இந்திய அரசு.
முதற்கட்டமாக, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் இத்திட்டம் சோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அஞ்சல் துறை சார்பில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், ‘டிஜிபின்’ என்று குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவில் தற்போது முகவரிகளைக் பின்குறியீடாக (பின்கோட்) குறிப்பிட்ட ஆறு இலக்க எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. இனி இதை மாற்றி பத்து இலக்க எண்கள் வழங்கப்படும்.
இதை வைத்து ‘கூகல் மேப்’ உதவியுடன் ஒருவர் தன் வீட்டின் முகவரியை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.
மத்தியப் பிரதேசத்தின் இந்துார் நகரில், டிஜிட்டல் முகவரி என்ற திட்டத்தைச் சோதனை முயற்சியாக மாநகராட்சி நிர்வாகம் நடைமுறைப்படுத்தி உள்ளது. இதற்காக, ஒவ்வொரு வீட்டின் முன், ‘க்யூஆர் கோட்’ வடிவில், ‘மின்னிலக்க தகடு’ (Plate) ஒன்று பொருத்தப்படும்.
முதற்கட்டமாக, இந்துார் மாநகராட்சியின் 82வது வார்டான சுதாமா நகர் பகுதியில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் முகவரி முறையை அறிமுகப்படுத்தி உள்ளதாக அம்மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த மின்னிலக்கத் தகடு மூலம் வீட்டின் உரிமையாளர்கள் சொத்து வரி உள்ளிட்டவற்றை எளிதில் செலுத்த முடியும்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், புகார்களையும் பதிவு செய்யலாம் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

