தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அக்டோபர் 26 முதல் மீண்டும் இந்தியா-சீனா நேரடி விமானச் சேவை

1 mins read
5ee6dfbc-d9cd-4e83-9339-7e7809835788
கொவிட்-19 கிருமிப் பரவலின்போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நேரடி விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன. - படம்: தினத்தந்தி
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நேரடி விமானச் சேவை வரும் 26ஆம் தேதி தொடங்கவுள்ளது என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நேரடி விமானச் சேவை வரும் 26ஆம் தேதி தொடங்கவுள்ளது என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. - ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியாவின் கோல்கத்தா நகரிலிருந்து சீனாவின் குவாங்சோ நகருக்கு வருகிற 26ஆம் தேதி முதல் அன்றாட விமானச் சேவைகளை வழங்கவிருப்பதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானச் சேவைகளை இந்திய, சீன விமான நிறுவனங்கள் வழங்கி வந்தன. கொவிட்-19 கிருமிப் பரவலின்போது அவை நிறுத்தப்பட்டன. மேலும், கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சினையும் அதற்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்தது.

இந்நிலையில் பல்வேறு ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டு, இண்டிகோ நிறுவனம் நேரடி விமானப் போக்குவரத்துகளை விரைவில் அறிமுகப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ், “இந்தியாவின் இரு நகரங்களிலிருந்து சீனாவுடன் நேரடி விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கிய முதல் நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதில் பெருமைப்படுகிறோம். இந்த மிக முக்கியமான நடவடிக்கையின் மூலம், சீனாவிற்குக் கூடுதலான நேரடி விமானச் சேவைகளை அறிமுகப்படுத்துவது குறித்துப் பரிசீலித்து வருகிறோம்,” என்று கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு இடையே தொடர்ச்சியான தொழில்நுட்ப அளவிலான ஈடுபாட்டைத் தொடர்ந்து இது வழங்கும் என்றும் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்