கடன் வாங்கியவர்களை மிரட்டக் கூடாது: இந்திய ரிசர்வ் வங்கி

கடன் வாங்கியவர்களை மிரட்டக் கூடாது: இந்திய ரிசர்வ் வங்கி

1 mins read
e9f0c636-490e-407f-99bf-c93ed2357e13
கடன் நிலு​வையை வசூலிப்​பது வங்​கி​யின் உரிமை​யாக இருந்தாலும், அது வாடிக்​கை​யாளரின் தனிப்​பட்ட சுதந்​திரம், கண்ணி​யம், தனி​ உரிமை​யைப் பாதிக்​கும் வகை​யில் அமையக் ​கூ​டாது என ரிசர்வ் வங்கி தெளி​வாகக் குறிப்​பிட்டுள்ளது. - சித்திரிப்புப் படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

புதுடெல்லி: கடன் வாங்கியவர்களை மிரட்டும் வகையில் வங்கி முகவர்கள் நடந்து கொள்ளக்கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கடன் வாங்கியவர்களைத் திட்டுவது, சமூக ஊடகங்கள் மூலம் தொல்லை தருவது ஆகிய செயல்பாடுகளில் ஈடுபடுவது அறவே தவிர்க்கப்பட வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கான புதிய விதிமுறைகளையும் அந்த வங்கி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் கடன் பெறுவோர் அதற்குரிய தவணை தொகையை செலுத்தத் தவறினால் வங்கி முகவர்களால் அச்சுறுத்தப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இதையடுத்து, இத்தகைய அச்சுறுத்தல்களைத் தடுக்கும் நோக்கில் சில விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கடன் நிலு​வையை வசூலிப்​பது வங்​கி​யின் உரிமை​யாக இருந்தாலும், அது வாடிக்​கை​யாளரின் தனிப்​பட்ட சுதந்​திரம், கண்ணி​யம், தனி​ உரிமை​யைப் பாதிக்​கும் வகை​யில் அமையக் ​கூ​டாது என ரிசர்வ் வங்கி தெளி​வாகக் குறிப்​பிட்டுள்ளது.

வங்​கி​கள் மற்​றும் வசூல் முகவர்​களுக்​கான இந்த ஒருங்​கிணைந்த புதிய விதி​முறை​கள் 2027 ஜனவரி 1ஆம் தேதி முதல் நாடு முழு​வதும் அதி​கார​பூர்​வ​மாக அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

புதிய விதி​களின்​படி, வங்கி வசூல் முகவர்​கள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்​டுமே வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்​ளவோ அல்​லது நேரில் சென்று சந்திக்கவோ முடியும்.

குறிப்புச் சொற்கள்