பட்டாசுகளுக்கு முழுமையான தடை விதிக்க விரும்பவில்லை: இந்திய உச்ச நீதிமன்றம்

பட்டாசுகளுக்கு முழுமையான தடை விதிக்க விரும்பவில்லை: இந்திய உச்ச நீதிமன்றம்

படம்: மில்லேனியம் போஸ்ட்

30 Oct 2026 - 8:14 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியாவின் உச்ச நீதிமன்றம் பட்டாசுகளுக்கு முழு​மையாகத் தடை விதிக்க விரும்பவில்லை என்று தெரி​வித்​துள்​ளது.

தலைநகர் டெல்லியிலும் தேசிய தலைநகர் பகுதி​யிலும் பட்டாசுகளை வெடிப்​ப​தால் காற்று மாசுபாடு ஏற்படுவதாக எழுந்துள்ள புகார்களை அடுத்து பட்​டாசுகளை வெடிக்​கவும் விற்​பனை செய்ய​வும் தடை விதிக்க வேண்​டும் என்று பல்​வேறு மனுக்​கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்​கல் செய்​யப்​பட்டன.

நீதி​மன்​றத்​துக்கு உதவ நியமிக்​கப்​பட்ட வழக்​கறிஞர்கள், பட்​டாசுகளின் நச்​சுக்​காற்று வளிமண்​டலத்​தில் மூன்று மாதங்கள்வரை இருக்கும் என்றும் தசரா பண்​டிகையைத் தொடர்ந்து டெல்லி​யில் காற்று மாசுபாடு 179லிருந்து 245ஆக உயர்ந்தது என்றும் கூறினர்.

கடந்த ஆண்டு தீபாவளி​யின்​போது இரண்டு நாள்கள் மட்டும் பசுமைப் பட்​டாசுகளுக்கு அனுமதி​யளித்​த​போது காற்று மாசு 1,000 புள்ளிகளைக் கடந்​தது. எனவே பட்​டாசுகளுக்கு முழு​மையாகத் தடை விதிக்க வேண்​டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

பட்​டாசு உற்​பத்​தி​யாளர்​கள், விற்​பனையாளர்​கள் சார்​பில் முன்னிலையான மூத்த வழக்​கறிஞர், சிவகாசி உற்​பத்​தி​யாளர்​கள் உரிமம் பெற்று அரசு அனுமதித்​துள்ள அளவிலேயே ரசாயனங்​களைப் பயன்​படுத்​திப் பசுமைப் பட்​டாசுகளைத் தயாரிக்​கின்​றனர் என்றார்.

காற்று மாசுபாட்டைத் தடுக்க போலித் தயாரிப்​பு​களின் உரிமங்​களை ரத்து செய்​ய​லாம் என்ற வழக்கறிஞர், ஒட்டுமொத்தமாகப் பட்​டாசுகளுக்குத் தடை விதிப்​பது சாமானிய மக்களைப் பாதிக்​கும் என்றார்.

இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், “தீபாவளிக் கொண்​டாட்​டம் என்​ப​து மக்​களின் மன​நிலை சார்ந்​தது. மக்​களாகவே முன்​வந்து படிப்​படி​யாகப் பட்​டாசு வெடிப்​பதைக் குறைக்க வேண்​டும். அதற்​கான விழிப்​புணர்வு நட​வடிக்​கைகளை அரசு மேற்​கொள்ள வேண்​டும்,” என்று விளக்கம் அளித்தனர்.

விளக்​கு​களை ஏற்றி வழிபடுவதே உண்​மையான மரபு என்று மேலும் கூறிய அவர்கள், பட்டாசுகளுக்கு முழு​மையாகத் தடை விதிக்க விரும்​பவில்லை என்றும் சமூகத்​தில் அது எதிர்​மறை​யான விளைவு​களை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டனர்.

பட்​டாசு விதி​மீறல் தொடர்​பாகச் சட்​ட ரீதியான நட​வடிக்கையை மேற்கொண்டால் நிலைமை சீராகும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

டெல்லியிலும் தேசிய தலைநகர் பகுதி​யிலும் பட்​டாசு வெடிப்​பது குறித்து ஓரிரு நாள்களில் சமநிலை​யான உத்​தரவு பிறப்​பிக்​கப்​படும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்