புதுடெல்லி: இந்தியாவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ், நிதி பங்களிப்பு அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்து உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடை மிகவும் குறைந்திருருப்பது தெரிய வந்துள்ளது.
2024 - 2025 நிதியாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.20,000க்கும் அதிகமான நன்கொடைகளின் மொத்த வரவு ரூ.517.39 கோடி. இதில் புரூடென்ட் தேர்தல் அறக்கட்டளை மட்டும் 42 விழுக்காடு, அதாவது 41.8 விழுக்காடு நன்கொடையை வழங்கியிருந்தது.
காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்து உள்ள 2025-2026 ஆண்டுக்கான நிதி பங்களிப்பு அறிக்கை, அக்கட்சிக்கு நன்கொடை குறைந்துள்ளதைக் காட்டுகிறது.
அதற்கு புரூடென்ட் நிறுவனம் முக்கியக் காரணமாக இருந்துள்ளது. அந்நிறுவனம் 2025- 2026 நிதியாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.25 கோடி மட்டுமே வழங்கியுள்ளது.
இதர நன்கொடையாளர்களில் ஸ்டார் சிமெண்ட் (ரூ.5 கோடி), சஜ்ஜன் பஜங்கா (ரூ.4 கோடி), பிரேம்குமார் பஜங்கா (ரூ.2 கோடி) ஆகியோர் முக்கியமானவர்களாக இருக்கின்றனர்.
பாஜக 2024-2025 நிதியாண்டில் ரூ.20,000க்கு மேற்பட்ட நன்கொடைகளாக ரூ.6,074.02 கோடியை பெற்றுள்ளது. இது, அதே காலகட்டத்தில் காங்கிரஸ் பெற்ற நன்கொடையைவிட கிட்டத்தட்ட 12 மடங்கு அதிகமாகும்.
2025-2026 நிதியாண்டுக்கான பாஜகவின் நிதிப் பங்களிப்பு அறிக்கையை தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை.
