அசாமில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.4ஆகப் பதிவு

அசாமில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.4ஆகப் பதிவு

படம்: பிக்சாபே

03 Feb 2026 - 5:17 pm

1 mins read

திஸ்பூர்: இந்தியாவின் அசாம் மாநிலத்தின் உதல்குரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமையன்று (பிப்ரவரி 2) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி மாலை 5.40 மணியளவில் ரிக்டர் அளவில் 3.4ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐந்து கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 26.80 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.07 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவிதத் தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

குறிப்புச் சொற்கள்