கெளகாத்தி: திரிபுரா, அசாம் உள்ளிட்ட இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் திங்கட்கிழமை (ஜனவரி 5) அதிகாலையில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
திரிபுராவின் கோமதி பகுதியில் அதிகாலை 3.30 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 ஆகப் பதிவானது.
அதன் தொடர்ச்சியாக, அசாமில் உள்ள மோரிகான் பகுதியில் அதிகாலை 4.15 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவிதத் தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.
மேலும் இந்த நிலநடுக்கம் அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது. மேலும் மத்தியக் கிழக்கு பூட்டான், சீனாவின் சில பகுதிகள் மற்றும் பங்ளாதேஷிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
அதிகாலை வேளையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தூக்கத்திலிருந்து எழுந்த பொதுமக்கள் அச்சத்துடன் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். பின்னர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

