சண்டிகர்: பஞ்சாப் மாநிலம், ஹோஷியார்பூர் மாவட்டத்தில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து தசுயா-ஹாஜிபூர் சாலையில் உள்ள சக்ரா அட்டா அருகே கவிழ்ந்ததில் எட்டுப் பேர் கொல்லப்பட்டனர், 25 பேர் காயமடைந்தனர்.
முதற்கட்ட தகவல்களின்படி, தசுயா வழியாகச் சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையில் கவிழ்ந்ததாக இந்தியா டுடே ஊடகத் தகவல் குறிப்பிட்டுள்ளது.
உள்ளூர் அதிகாரிகளும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடனடி மீட்பு நடவடிக்கைகளில் இறங்கினர்.
முகேரியன் துணை காவல் கண்காணிப்பாளர் குல்விந்தர் சிங் விர்க் கூறுகையில், “காயமடைந்த பயணிகள் தசுயா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
“விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விபத்து குறித்து முழுமையாக விசாரிக்கப்படும்,” என்றார்.