தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இடிந்து விழுந்த சுரங்கப்பாதைக்குள் சிக்கிய எண்மர்

1 mins read
9ec10322-9af0-4dbe-80f2-183d64ba31f9
கட்டுமானப் பணி நடைபெற்ற சுரங்கப் பகுதி. - கோப்புப்படம்: ஊடகம்

ஹைதராபாத்: சுரங்க கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட திடீர் விபத்தில் எட்டுப் பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணைப் பகுதியில் சனிக்கிழமை (பிப்ரவரி 22) நிகழ்ந்தது.

சனிக்கிழமை காலை கட்டுமான ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுரங்கப்பாதை ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.

அப்போது 50 பேர் பணியில் இருந்ததாகவும் அவர்களில் 43 பேர் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும், சுரங்கத்துக்குள் சிக்கி இருப்பது ஏழு பேரா அல்லது எட்டுப் பேரா என்பது உறுதியாகத் தெரியவில்லை என ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

சுரங்கப்பாதை பத்து மீட்டருக்கு இடிந்து விழுந்துள்ளதாக தெரிவித்த அதிகாரி ஒருவர், உள்ளே சிக்கி இருப்பவர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்