செங்கல்பட்டில் ரூ.700 கோடி முதலீட்டில் மின்கருவிகள் உற்பத்தி ஆலை

1 mins read
8ba2f91f-2e3a-4fa9-9836-a8adf89483ca
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. - படம்: இந்திய ஊடகம்

சென்னை: தமிழகத்தில் சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டில் மின்கருவி உற்பத்தி ஆலை ஒன்று அமைக்கப்படுகிறது.

இதுதொடர்பான ஒப்பந்தத்தில் ஜப்​பானைச் சேர்ந்த ஹிகோகி பவர் டூல்ஸ் நிறு​வனமும் தமிழக அரசும் கையெழுத்திட்டன. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

ரூ.700 கோடி முதலீட்டில் ஆலை கட்டப்படுகிறது. இதன்மூலம் ஏறத்தாழ 1,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஜப்​பானைச் சேர்ந்த உலகளா​விய நிறு​வன​மான ஹிகோகி ஹோல்​டிங்ஸின் துணை நிறு​வன​மான ஹிகோகி பவர் டூல்ஸ் இந்​தியா பிரைவேட் லிமிடெட், 15க்​கும் மேற்​பட்ட விற்​பனை அலு​வல​கங்​கள், 500க்​கும் மேற்​பட்ட விநி​யோகிப்பாளர்கள், 100க்​கும் மேற்​பட்ட சேவை மையங்​களு​டன் விரி​வான கட்டமைப்பைக் கொண்​டுள்​ளது,” என அரசு கூறியது.

குறிப்புச் சொற்கள்