டெல்லி: புதிய வேளாண் சட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, சலுகைகள் வழங்க வேண்டும், நிலமற்ற விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
நொய்டாவில் உள்ள மகாமாயா மேம்பால பகுதியில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி திங்கட்கிழமை பிற்பகல் தொடங்கியது.
இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஆயிரகணக்கான விவசாயிகள் டிராக்டர்களில் திரண்டனர். விவசாயிகள் போராட்டத்தையொட்டி டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.