புதுடெல்லி: மும்பை நகரில் தேர்தல் ஆணைய அலுவலகம் இருக்கும் கைசர்-ஐ-ஹிந்த் (Kaiser-I-Hind) கட்டடத்தில் தீ மூண்டது.
உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) அதிகாலை 2.30 மணிக்குத் தீ மூண்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் தெரிவித்தது. யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 3.30 மணிக்குத் தீயணைப்புப் படையின் செயல்பாட்டு நிலையம் (control room), அவசர நடவடிக்கை தேவைப்படும் தீச்சம்பவமாக நிலைமையை வகைப்படுத்தியது. ஐந்து தளங்கள் உள்ள கைசர்-ஐ-ஹிந்த் கட்டடத்தின் நான்காவது தளத்தில் தீ மூண்டது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக நகராட்சி ஆணையம் தெரிவித்தது.
தீக்காண காரணம் இன்னும் தெரியவில்லை.

