சென்னை: லண்டனில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) சென்னை சென்று கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் நடுவானில் பயணம் செய்துகொண்டிருந்த பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.
லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் சென்னைக்கு சென்று கொண்டிருந்தது.
விமானம் புறப்பட்ட 37 நிமிடங்களிலேயே மீண்டும் லண்டனுக்கே திரும்பிச் சென்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு மாற்று விமானத்துக்கு ஏற்பாடு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.