தூதரக வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 2 கோடி சுருட்டிய முன்னாள் அதிகாரி

1 mins read
1d912682-146b-43a3-b06a-5530074142ba
எழுத்துபூர்வமாகத் தனது தவற்றை மோகித் ஒப்புக்கொண்டதால், உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டு, அங்கிருந்து குடும்பத்துடன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். - படம்: பிக்சாபே

புதுடெல்லி: சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐக்கிய நாட்டுச் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகம் இயங்கி வருகிறது.

அங்குக் கணக்கு அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர், தூதரகத்தின் வங்கிக் கணக்கிலிருந்து, கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய் சுருட்டியதாகக் கூறப்படுகிறது.

அதன் தொடர்பில், மத்தியப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

2024ஆம் ஆண்டு டிசம்பரில், தூதரகத்தின் துணைப் பிரிவு அதிகாரியாக மோகித் என்பவர் பணியில் சேர்ந்தார்.

உணவு, போக்​கு​வரத்து போன்ற பல்​வேறு பணி​களுக்கு வழங்க வேண்​டிய பணத்தைக் கையாளும் பொறுப்பு மோகித்​திடம் ஒப்​படைக்​கப்​பட்​டது.

அதன்​படி, யூனியன் பேங்க் ஆப் சுவிட்​சர்​லாந்து வங்​கி​யில் இருக்கும் இந்​தியத் தூதரகக் கணக்​கிலிருந்து பல்​வேறு பணி​களுக்குப் பணப் பரிமாற்றம் செய்ய வேண்​டும்.

அந்த வங்கியில் அமெரிக்க டாலர்கள், சுவிசு பிராங்க் போன்ற நாணயங்களில் கணக்கு வைக்கப்பட்டிருந்தது.

இதில், சுவிசு பிராங்க் நாணயக் கணக்கில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது.

பணம் வழங்க வேண்​டிய​வர்​களுக்கு ‘கியூஆர்’ குறியீடு மூலம் தூதரக வங்​கிக் கணக்​கிலிருந்து பணம் அனுப்புவது வழக்​கம். இந்​நிலை​யில், பல்​வேறு பணி​களுக்​கான ‘கியூஆர்’ குறியீடுகளில் மோகித் முறை​கேடு செய்​தது தணிக்​கை​யின்போது தெரியவந்​தது.

இதையடுத்து, எழுத்துபூர்வமாகத் தனது தவற்றை மோகித் ஒப்புக்கொண்டதால், உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டு, அங்கிருந்து குடும்பத்துடன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

மேலும், கையாடல் செய்த பணத்தை, ‘கிரிப்டோகரன்சி’ எனப்படும் மின்னிலக்க நாணயங்களில் அவர் முதலீடு செய்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்